Wednesday, July 28, 2010

2012ல்-உலகம்-அழியப்போகிறதா - ஒரு ஆராய்ச்சி கட்டுரை


சிக்கலிலும் சிக்கல் நிறைந்த ஆண்டாக சிக்கியிருக்கின்றது 2012. நவீன மனித சமூகத்தின் இறுதியாண்டு 2012 என்ற கருத்துக்கள் இன்று பரவலாக பேசப்படுகின்றன. அதில் இரண்டு முக்கியமான விடையங்கள் உள்ளன. ஒன்று மாயன் நாட்காட்டியின் எதிர்வு கூறல், மற்றொன்று நிபுரு என்ற 12 வது கிரகத்தின் வருகை என்தாகும்.

முதலில் மாயக்கள் (மாய்) பற்றி பார்ப்போம்.
அராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் கிபி 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், கிபி 250 தொடங்கி கிபி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது.

கிபி 900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். இதற்கு ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும் ஒரு காரணமாக கருதப்படுகிறது , அவர்கள் பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.

இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயாக்களின் வம்சாவழியினர் தென் அமேரிக்க பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.

மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் எனவும் கூறுகிறார்கள். மாயாக்களின் கலைத் திறன் மிகவும் நுட்பமானது, சிற்பக் கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. கட்டிட கலையும் இவற்றுள் அடங்கும். மாயாக்களால் Tikal, Palenque, Copan, Kalakmul, Dos Pilas, Uaxactun, Altun Ha போன்ற நகரங்கள் மிகவும் திறம்பட உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0′ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள்.
கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாலும் வான் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளன.



மாயாக்களின் நாள்காட்டியில் (Maya's Calendar) ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு?
விண்மீன் மண்டலத்தின் ஒருநாள் என்பது புவியின் 25,625 வருடங்களை கொண்டது இதனை மாயன் நாட்காட்டி 5,125 வருடங்களை கொண்ட ஐந்து காலகட்டங்களாக பிரிக்கின்றது. அதன்படி நமது பூமி இப்போது ஐந்தாவது காலகட்டத்தின் இறுதியில் இருக்கின்றது என்கின்றது.

அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது. கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.

19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும்.

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுள் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள். நமது சூரியனின் ஒளிரும் தன்மை அதிகரிப்பதுடன் சூரியனில் இருந்து அதிகமான தீச்சுவாலைகள் தோன்றும் என மாயன் குறிப்பிடுகின்றது. அந்தவேளையில் புவியின் காந்தப்புலங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என இன்று மாயன் நாட்காட்டியினை மேற்கோற் காட்டும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த 'The Mayan Factor' எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் "The Great Cycle' எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது . அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயாக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை 'The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.

2) இரண்டாவாது காரணமான நிபரு பற்றி பார்ப்போம்.

நிபுரு என்ற 12 வது கிரகத்தின் வருகை என்பதாகும் பன்னிரண்டாவது கோள் என குறிப்பிடப்படும் நிபுரு அல்லது கோள்-எக்ஸ் தொடர்பான கருத்துக்களினையும் அது எவ்வாறு 2012 உடன் தொடர்புபடுத்தப்படுகின்றது எனவும் தொடர்ந்து பார்ப்போம்.

நிபரு சூரியனை வலம்வருவதற்கு 3600 வருடங்கள் எடுக்கின்றதாம். நிபுரு என்ற சொல் ஆதி மனித சமூகமாகிய சுமேரியர்களின் கல்வெட்டு எழுத்துக்களில் இருந்து உருவாகியதாக தெரிகின்றது. நிபுரு வித்தியாசமான மனித சமூகத்தை கொண்ட ஒரு கிரகம் என்கின்றனர் சிலர். நிபுரு புவியினை காட்டிலும் மூன்று மடங்கு பெரிய கிரகம் என்கின்றனர் சிலர். நிபரு இதுவரை எந்த செயற்கைக்கொள்க்கும் தெரியவில்லை, இதை விட அளவில் சிறயதாக இருக்கும் புளுடோ நமக்கு தெரியும் பொது நிபரு ஏன் தெரியவில்லை என ஆய்வாளர்கள் கேள்வி?, அதற்கு நிபரு சூரியனின் பின் திசையில் இருப்பதால் தெரியவில்லை என்கிறார்கள்.

எனினும் சிலர் அதனை ஒரு போர் நச்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். இருண்ட அல்லது இறந்த நச்சத்திரம் என்பது நிபுருவுக்கு உள்ள பொதுவான விளக்கமாகும்.
[நிபுரு என்ற கிரகம் ஒன்றே இல்லை அது வெறும் பொய் கற்பனைகளே என்பது விஞ்ஞானிகளின் விடை என்பதை கருத்தில் கொள்க. நாம் இப்போது பார்க்க இருப்பது ஒன்று நிபுரு என்ற ஒரு கருத்து எப்படி தோன்றியிருக்கின்றது என்பது பற்றியே]
1970 மற்றும் 1980 களில் நிபுரு தொடர்பாக அதிகமாக பேசப்பட்டது. நெப்யூன் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் அது நிபுரு ஆகவே ஆரம்பத்தில் கருதப்பட்டது எனினும் பின்னர் பு@ட்டோ நிபுருவாக கருதப்பட்டது எனவே இதுவெல்லாம் வெறும் கற்பனை என்கின்றனர் பலர்.



நிபரு, நமது சூரியத்தொகுதியிலேயே பெரிய கிரகம் என குறிப்பிடப்படுவதுடன் அது 2003 அக்டோபரில் வானில் சிறிய நட்சத்திரமாக அவதானிக்கப்பட்டதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் 2012 டிசம்பர் மாதம் அது புவியின் சுற்றுவட்ட பாதைக்கு அருகில் வரவுள்ளதாகவும் பொதுவாக வானில் இரண்டாவது சந்திரன் போன்று தோன்றும் எனவும் இன்று பலர் கூறிவருகின்றனர். அந்தவேளையில் புவியில் பாரிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அழிவுகள் என்பன அரங்கேறும் எனப்படுகின்றது. இதனை அடியொட்டியதாகவே மாயன் சமூகத்தின் சுழற்றி நிகழ்வுகளின் நாட்காட்டியும் 2012 டிசம்பரில் நிறைவடைவதாக பலரும் கூறிவருகின்றனர்.


நமது சூரியன் அதன் விண்மீன் மண்டலத்தின்(Galaxy) நேரடி பார்வையில் வருகின்றது. இந்த நேரத்தில் விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள சூப்பர்நோவா கருங்குழி [Supernova black hole] மற்றும் நமது சூரியன், பூமி என்பன ஒரே நேர்கோட்டில் நேராக சந்திக்கவுள்ளன.
இந்தவேளையில் சூப்பாநோவா கருங்குளியில் அதாவது நமது விண்மீன் மண்டலத்தின் மையத்தில் இருந்துவரும் காந்த அலைகளால் நமது பூமியயும் சூரியனும் வெகுவாக பாதிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில் சூரியனில் அதிகமான மாற்றங்கள் (இதனை மாயன் “சூரிய நிலநடுக்கம்”(sun earth quack) என்கிறது) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனப்படுகின்றது. இச்செயற்பாடு ஒவ்வொரு 26,000 வருங்களுக்கு ஒருமுறை நடைபெறுவது என்கிறது மாயன் நாட்காட்டி.

2012 இன் பின்னர் நமது விண்மீன் மண்டலத்தின் நேர்கோட்டிற்கு வரும் பூமி அதை தாண்டியதும் பூமியினுடைய காந்தப்புலங்கள்திசைமாறும் எனப்படுகின்றது. இதனால் துருவங்கள் இடம்மாறுவதுடன் அதுவே புவியின் பாரிய அழிவுக்கு வழிகோலும் எனப்படுகின்றது.

பாரிய எரிமலை வெடிப்புக்கள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் என்பனவற்றுடன் நவீன மனித சமூகத்தின் அழிவு ஒன்று அரங்கேறவுள்ளது என்கிறது மாயன். இப்படியான துருவங்களின் இடமாற்றத்தினால் நிகழும் இச்செயற்பாடுள் புவியில் உள்ளவர்களின் கண்ணுக்கு ஏறக்குறைய 40 வருடங்கள் சூரியனின் பிரசன்னத்தை மறைக்கும் அளவிற்கு புவியை புகைமண்டலங்கள் மூடிக்கொள்ளும் எனப்படுகின்றது. “துருவங்களின் இடப்பெயர்ச்சி” என்ற விடையம் விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். எனினும் அது 2012 இல் அது நிகழுமா என்பது குறித்து விஞ்ஞானிகளால் எதுவும் கூறப்படவில்லை.
இதை ப் பற்றி உலகப் புகழ் பெற்ற டேவிட் மோரிசன்( NAI Senior Scientist) இவர் நாசாவோட ஒரு பொதுமக்கள் சேவையான “கேளுங்கள் ஒரு விண்வெளித்துறை ஆய்வாளரை” (“Ask an Astrobiologist”) சேவையோட பொதுமக்கள் விஞ்ஞானியாம்.அந்த சேவையில அவரு, பொதுமக்களோட விண்வெளி சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லுவாராம். இந்தச் சேவை மூலமாத்தான் அவரு 2012 உலக அழிவப் பத்தி , பொதுமக்கள்கிட்ட இருந்து பல கேள்வி வருவதே பார்த்துட்டு இதுல என்னதான் இருக்குன்னு கண்டுபிடிக்க ஒரு ஆராய்ச்சி பண்ணாராம்! அந்த ஆய்வோட முடிவில அவரு கண்டுபிடிச்ச விஷயங்கள மக்களுக்கு எடுத்துச் சொல்றதுக்காக கேள்வி-பதில் அடங்கிய ஒரு ஆய்வறிக்கைய தயாரிச்சிருக்காங்க Click here to Download the His Research (பி.டி.எஃப்) . (Must Download this)


References
http://www.december212012.net/